For this Day:

;

மேலான செல்வம் நல்ல புத்தகங்களில்

நான் அறிந்து கொள்ள வேண்டியவற்றைத் தருபவை புத்தகங்களே! இதுவரை நான் படித்திராத புத்தகத்தைத் தருபவனே நல்ல நண்பன்!    -ஆபிராகாம் லிங்கன்

உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் - தயவுசெய்து உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியைத் தூர எறிந்துவிட்டு, அது இருந்த இடத்தில் ஒரு புத்தக அலமாரியை வையுங்கள்!   -ரோல்ட் தஹில்

உங்கள் குழந்தைகளின் உலகத்தை விரிந்து பரந்ததாக மாற்ற நிறைய வழிகள் இருந்தாலும் புத்தகங்களை நேசிக்கக் கற்றுக் கொடுப்பதுதான் தலை சிறந்த வழி!   -ஜாக்குலின் கென்னடி

பழைய சட்டையை அணிந்து கொண்டிருந்தாலும் புதிய புத்தகங்களை வாங்க மறுக்காதே!  -ஆஸ்டின் பெல்ப்ஸ்

உறைந்த பனியாக இருக்கும் உங்கள் உள்ளக் கடலை உடைத்து நீர்வெளியாக்கும் கோடரியே புத்தகம்!  -ப்ரான்ஸ் காஃப்கா

நல்ல புத்தகங்களை படிக்க விரும்பாதவன் படிப்பறிவில்லாதவனுக்குச் சமம்!  -மார்க் ட்வெய்ன்

பெரும் செல்வத்தைக் கொண்ட புதையல் தீவை விட மேலான செல்வம் நல்ல புத்தகங்களில் உள்ளது!  -வால்ட் டிஸ்னி

புத்தகங்களை ஆர்வத்துடன் வாசிக்கக் கற்றுக் கொள்ளும்போதுதான் நீ முழுச் சுதந்திரம் பெற்றவனாகிறாய்!  -ஃப்ரடெரிக் டக்ளஸ்

எனக்குத் தெரிந்த சொர்க்கம் நூலகம்தான்!   -ஜார்ஜ் லூயி ஃபோர்கே

நீ படிக்க விரும்பும் புத்தகம் இன்னும் எழுதப்படவில்லையென்று நீ உணர்ந்தால், அத்தகைய புத்தகத்தை நீயே எழுத ஆரம்பித்துவிடு!  -டோனி மாரிஸன்

No comments: