கவிதை கேளுங்கள்
2. அரசியல் பிறர் சொத்தை சூரையாடினான்...திருடா என்றார்கள் பல உயிர்களைக் கொன்றான்...கொலைகாரா என்றார்கள் சில பெண்களின் கற்பை பறித்தான்...பாவி என்றார்கள் இவை அனைத்தயும் செய்தான்...தலைவா என்றார்கள்!!! 3. லஞ்சம் வாங்கினேன்...கைது செய்தார்கள் கொடுத்தேன்...விடுதலை செய்தார்கள்! 4. இந்தியா ஒளிர்கிறது ஏற்றுமதி ரக வாகனத்தில் ஏறி ஆயிரத்திற்குப் பெற்ற இங்கிலாந்து உடையணிந்து எளிதாய் கைக்குள் அடங்கும் கொரிய தொலைபேசியில் ஏளனமாய் நகைத்து நண்பனிடம்: "ஏழ்மை ஒழியும் வரை இந்தியா ஒளிராது!" 5. சந்தன மரம் என்றார்கள் பல்லாண்டுகளாக... பின்னர் சங்கர மடம் என்றார்கள்... இப்போது சங்கட மனதுடன் நான்... சந்ததம் இப்படியொரு சங்கதி கேட்டு! 6. ஒரு அரசியல்வாதியின் கடைசி சடங்குகள் செய்யும் போது... மறந்தும் கைத்தட்டி விடாதீர்கள்! அவன் மறுபடியும் எழுந்துவிடுவான்! -யாரோ
|
For this Day:
;
கவிதை கேளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment